தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவனது நடிப்பில் தற்போது லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இதை முடித்து விட்டு அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க உள்ளார்.
இந்த படத்துக்கு ரூபாய் 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்க உள்ளார் என ஏற்கனவே தகவல் வெளியானது. இப்படி படங்களில் நடிப்பதன் மூலம் மட்டுமின்றி சென்னையில் இயங்கும் மண்டபங்கள் மூலமும் விஜய் வருமானம் ஈட்டி வருகிறார்.
தயாரிப்பாளர் லலித் குமாருக்கு தனது திருமண மண்டபத்தை மாதம் 15 லட்சம் என்ற அடிப்படையில் 15 வருடத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு விட்டுருப்பதாக தெரிய வந்துள்ளது.
மேலும் தனக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வரும் ரிலையன்ஸ் சூப்பர் மார்க்கெட் மூலம் மாதம் 12 லட்சம் வாடகை வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
மண்டபங்கள் மட்டுமின்றி இன்னும் பல பிசினஸில் விஜய் வருமானம் ஈட்டி வருகிறார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
