தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இருந்தபோதிலும் இந்த படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழியிலும் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார். பிரபு, சரத்குமார், பிரகாஷ்ராஜ், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், ஜெயசுதா, யோகி பாபு என எக்கச் சக்கமான திரையுலக பிரபலங்கள் இணைந்து நடித்து வரும் இந்த படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா மற்றும் மெஹ்ரின் பிர்ச்சாடா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்தப் படத்தில் விஜய் இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாக நடிக்கிறார் என தெரியவந்துள்ளது.
அதாவது விஜயின் மகனாக கீர்த்தி சுரேஷ் மகனாக பெண் குயின் படத்தில் நடித்த சிறுவன் நடிக்கிறான். அதேபோல் விஜய்யின் மகளாக பீஸ்ட் திரைப்படத்தில் நடித்த குழந்தை ஒருவர் நடிக்கிறார். இவர்கள் இருவரும் வம்சி உடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.
இதன் மூலம் விஜய் இரண்டு குழந்தைகளுக்கு அப்பாவாக நடித்து வருகிறார் என்பது உறுதியாகியுள்ளது.
