கோலிவுட் திரை உலகில் பிரபலம் முன்னணி, நடிகராகவும் இயக்குனராகவும் பன்முகத் திறமைகளுடன் வளம் வருபவர் சுந்தர் சி. இவர் நகைச்சுவை உணர்வை மையமாகக் கொண்டு வித்தியாசமான படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி முத்திரையை படைத்திருக்கிறார்.
இன்று பிறந்தநாள் காணும் சுந்தர் சி அவர்களுக்கு ரசிகர்களும் திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் இவரது இயக்கத்தில் ஹாரர் படமாக வெளியான அரண்மனை திரைப்படத்தின் 4வது பாகம் குறித்த தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது இயக்குனர் சுந்தர்.சி அவர்களின் இயக்கத்தில் இதுவரை மூன்று பாகங்களுடன் வெளியான அரண்மனை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து நான்காவது பாகத்தை இயக்க சுந்தர்.சி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாக இருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். இந்த புது காம்போவில் உருவாக இருக்கும் இப்படம் குறித்த தகவல் ரசிகர்களின் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.
• #Aranmanai4 :#SundarC confirms is next sequel ✍️
Releasing this year👻🤩🔥
🌟 Ing @VijaySethuOfflOfficial announcement soon! 🧾 pic.twitter.com/Cxu0sLE4I5
— #Cini-Villa 😎 (@cini_villa) January 20, 2023