Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விடுதலைப் படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த விஜய் சேதுபதி

actor vijay sethupathi tweet about viduthalai movie

தென்னிந்திய திரை உலகில் பிரபலம் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதாநாயகனாக நடித்திருக்கும் “விடுதலை” திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்தது.

இரண்டு பாகங்களாக வெளியாக இருக்கும் இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வழங்க உள்ளது. இளையராஜா இசையமைப்பில் உருவாகி இருக்கும் இப்படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட்டை விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதில் விடுதலை படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி இருப்பதாக புகைப்படங்களை பகிர்ந்து இருக்கிறார். அது தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.