தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது மகன் ஜேசன் சஞ்சய் லைக் நிறுவனத்தின் தயாரிப்பில் ஒரு படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார்.
படம் குறித்த அறிவிப்பு வெளியாகி நீண்ட நாட்கள் ஆகியும் இதுவரை இந்த படத்தில் நடிக்கப் போவது யார் படம் எப்போது தொடங்கப்படுகிறது என்பது குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. அதே சமயம் தளபதி விஜய் தனது மகன் இயக்கப் போகும் படம் பற்றி வாய் திறக்காமல் மௌனம் காத்து வருகிறார்.
அனுபவம் இல்லாமல் மகன் படத்தில் இயக்குவது பிடிக்காத காரணத்தினாலே விஜய் மௌனமாக இருந்து வருவதாக ஒரு பக்கம் பேசப்பட்டு வருகிறது. இந்த சூழலில் ஜேசன் சஞ்சய் பெரிய நடிகர்கள் சிலரை சந்தித்து கதை கூறிய நிலையில் 21 வயது பையன் ஒரு முழு படத்தை நல்லபடியாக இயக்கி முடிக்க முடியுமா என்ற தயக்கம் காரணமாக நைசாக நழுவிக் கொள்வதாக சொல்லப்படுகிறது.
இதனாலேயே ஜேசன் சஞ்சயின் படம் தள்ளி போவதாக தகவல்கள் பரவி வருகிறது. இன்னொரு பக்கம் லைக் நிறுவனம் நிதி நெருக்கடியில் தவித்து வருவதால் சஞ்சயின் படத்தை கொஞ்ச நாளைக்கு தள்ளி வைத்து இருப்பதாகவும் இன்னொரு தகவல் பரவி வருகிறது.
