மாரடைப்பு காரணமாக வில்லன் நடிகர் மரணம் அடைந்துள்ளார்.
தமிழ் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து பிரபலமானவர் விஜய ரங்கராஜு என்ற ராஜ்குமார்.
70 வயதாகும் இவர் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் காயம் அடைந்த இவர் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் எதிர்பாராத விதமாக திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார் இவரின் இந்த மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.