கோலிவுட் திரை உலகில் மாபெரும் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வருபவர் விக்ரம். இவர் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார். பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்த வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
இதற்கிடையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஆதித்த கரிகாலனாக நடித்திருக்கும் விக்ரம் இப்படம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி திரைக்கு வர இருப்பதால் இப்படத்தின் பிரமோஷன் பணிகளிலும் படகுழுவினருடன் இணைந்து தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில் அடுத்த கட்ட பிரமோஷனுக்காக ஹைதராபாத் சென்று இருக்கும் நடிகர் விக்ரமின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களால் ட்ரெண்டிங்காகி வருகிறது.
Majestic and confident, #ChiyaanVikram looks absolutely in his element in this classy outfit which he wore for the Hyderabad leg of promotions for #PS2
📸 Udhaya#StyleKing #SwagStar @chiyaan #PS2 #PonniyinSelvan2 #AdithaKarikalan #CholaTour pic.twitter.com/WtB67nGFyR
— Yuvraaj (@proyuvraaj) April 24, 2023