தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் நடிகர் விக்ரம். ரசிகர்களால் அன்போடு சியான் விக்ரம் என்று அழைக்கப்பட்டு வரும் இவர் கடந்த ஆண்டு மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 1 திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் தீவிரமாக நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்பான அப்டேட்கள் தொடர்ந்து இணையதளத்தில் அவ்வப்போது வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்க செய்து வரும் நிலையில் நடிகர் விக்ரம் தனது ட்விட்டர் பக்கத்தில் இப்படத்தின் லுக்கில் கண்ணாடியுடன் தண்ணீரில் மாஸாக இருக்கும் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.
Back to the future. #Thangalaan pic.twitter.com/wKUBlWZd0c
— Vikram (@chiyaan) February 17, 2023