Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தங்கலான் படம் குறித்து வெளியான சூப்பர் தகவல். மகிழ்ச்சியில் ரசிகர்கள்

actor-vikram-thangalan-movie-new-update

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக விளங்கி வருபவர் சியான் விக்ரம். டப்பிங் ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கி இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக இடம் பிடித்துள்ள இவரது நடிப்பில் வெளியாகும் பல்வேறு திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வெற்றியை பெற்றுள்ளன.சியான் விக்ரம் நடிப்பில் இறுதியாக வெளியான மகான், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக பா.ரஞ்சித் இயக்கத்தில் தங்கலான் திரைப்படம் உருவாகி வருகிறது.

பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து வரும் இந்த திரைப்படம் கேஜிஎப் படத்தில் இடம்பெறும் மனிதர்களின் வாழ்க்கையை பற்றியதாக இருக்கும் என இயக்குனர் பா.ரஞ்சித் வெளிப்படையாக தெரிவித்து இருந்தார். ஞானவேல் ராஜா தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் குமார் இசையில் உருவாகி வரும் இப்படத்தின் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் கர்நாடகாவில் உள்ள கே ஜி எஃப் தங்கவயல் பகுதியில் நடைபெற்று வருகிறது. இதில் சில வெளிநாட்டு கலைஞர்களும் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில் இந்த படபிடிப்பானது வருகின்ற டிசம்பர் 12 ஆம் தேதியுடன் நிறைவு பெற இருப்பதாகவும், இதனை தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற போவதாகவும் புதிய தகவல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

actor-vikram-thangalan-movie-new-update
actor-vikram-thangalan-movie-new-update