தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விமல். இவரது நடிப்பில் வெளியான களவாணி, மன்னர் வகையறா போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றன.
மேலும் இவர் நடித்த விலங்கு என்ற வெப் சீரிஸ் தொடரும் மாபெரும் வெற்றி பெற்றது. நடிகர் விமல் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது ஒரு படத்திற்காக தாடி மீசை என முகம் வீங்கி உடல் எடை கூடி ஆளே தெரியாமல் மாறி உள்ள போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகிய ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
இந்த போட்டோவை பார்த்து பலரும் நடிகர் விமலா இது என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
