தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவருடைய நண்பர், மேனேஜர், தேவி அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் என விஷாலுக்கு மிகப்பெரிய பக்கபலமாக இருந்து வருகிறார் ஹரி கிருஷ்ணா.
இவர் உயர் ரத்த அழுத்தம் காரணமாக பில்ரோத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என விஷால் ரசிகர்கள் பலரும் பிராத்தனை செய்து வருகின்றனர். நடிகர் விஷால் ஹரி கிருஷ்ணா தன்னுடைய குடும்பத்தில் ஒருத்தர், என்னுடைய தம்பி.. நான் எப்பவும் அவர் கூடவே இருப்பேன் என பல நிகழ்ச்சிகளில் பேசிய வீடியோக்களையும் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
ஹரி கிருஷ்ணா விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என வாழ்த்துக்கள்
