நடிகர் விஷால் அவர்கள் பொதுவாக எந்த பரிசு பொருளையும் அவரை சந்திக்கவரும் எவரிடத்திலும் பெறுவதில்லை என்பதை வழக்கமாக வைத்திருப்பவர்.
அதற்காக செலவிடும் தொகையை ஏழை எளியோர்களுக்கும், ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவி செய்யும்படி அறிவுறுத்தி வருகிறார். அதேபோன்று அவரும் அவருடைய நண்பர்கள் பிறந்த நாள் மற்றும் எந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டாலும் அவர்களுக்கு பரிசு பொருட்களை கொடுப்பதை தவிர்த்து அவர்களின் பெயரில் ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் குழந்தைகள் இல்லத்திற்கு உணவு அளித்து அந்த இல்லங்களில் உள்ளோரின் உள்ளம் மகிழ, வாழ்த்துக்களை தெரிவிப்பது வழக்கம், அதேபோன்று ஒரு நிகழ்வு தான் தற்போதும் நடந்துள்ளது.
சமீபத்தில் நடிகர் யோகிபாபு அவர்களின் அன்பு மகள் பரணி கார்த்திகா பிறந்த நாள் விழா நடைபெற்றது அக் குழந்தையின் பெயரில் ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் குழந்தைகள் இல்லத்தில் உணவளித்து அவர்களின் வாழ்த்து செய்தியுடன் யோகிபாபு குடும்பத்தாரை நேரில் சந்தித்து கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் யோகிபாபு அவர்களின் அன்பு மகள் பரணி கார்த்திகா பிறந்த நாளில் முதியோர்கள் மற்றும் குழந்தைகள் இல்லத்தில் உணவு அளித்தபோது@VishalKOfficial @HariKr_official @iYogiBabu @VISHAL_SFC pic.twitter.com/NGvFZemN3y
— DEVI FOUNDATION (@DEVIFOUNDATIONS) October 26, 2023