Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லத்தி படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட படக்குழு..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் துப்பறிவாளன் 2, லத்தி, மார்க் ஆண்டனி உட்பட பல்வேறு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. இவற்றில் லத்தி திரைப்படத்தை ஏ வினோத்குமார் இயக்க சுனைனா, பிரபு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

ராணா புரொடக்சன் நிறுவனத்தின் தயாரிப்பில் மூலமாக ரமணா மற்றும் நந்தா உள்ளிட்டோர் படத்தை தயாரிக்கின்றனர். மேலும் யுவன் சங்கர் ராஜா இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார். பாலசுப்பிரமணியன் ஒளிப்பதிவு செய்ய என் பி ஸ்ரீகாந்த் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டுள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் மோஷன் போஸ்டர், டீசர் உள்ளிட்டவை வெளியாக்கி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக எகிற வைத்துள்ளது.

இப்படியான நிலையில் தற்போது இந்த படம் வரும் டிசம்பர் மாதம் கிறிஸ்மஸ் பண்டிகைக்கு வெளியாகும் என அதிகாரபூர்வமான அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இதற்காக வெளியான சிறப்பு போஸ்டரை விஷால் ரசிகர்கள் மகிழ்ச்சியுடன் வைரலாக்கி வருகிறது.