Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லக்ஷ்மி மேனன் விஷால் திருமணம் குறித்து பரவும் தகவல். விளக்கம் கொடுத்து விஷால் போட்ட பதிவு

actor vishal-marrying-lakshmi-menon-latest-news

தமிழ் சினிமாவில் பன்முக திறமைகளுடன் வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் அடுத்ததாக மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியாக உள்ளது.

இப்படியான நிலையில் இவருக்கும் லட்சுமி மேனனுக்கும் திருமணம் என சமூக வலைதளங்களில் தகவல் தீயாக பரவி வருகிறது.

இதனால் நடிகர் விஷால் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அதாவது, தன்னை பற்றி பரவும் வதந்திகளுக்கு விளக்கம் அளிப்பதில் உடன்பாடு இல்லாதவன் நான், அது தேவையற்ற செயலும் கூட, ஆனால் தற்போது எனக்கும் லட்சுமி மேனனுக்கும் திருமணம் என பரவும் தகவல் முழுக்க முழுக்க பொய்யானது.

இது குறித்த நான் விளக்கம் அளிக்க காரணம் அவர் ஒரு நடிகை என்பதை தாண்டி ஒரு பெண் என்பது தான் என் நீண்ட விளக்கம் அளித்துள்ளார்.

இதோ அந்த பதிவு