Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தத்துவத்துடன் வீடியோ ஒன்றை வெளியிட்ட விஷால்.

actor-vishal-motivational-post

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நட்சத்திரமாக விளங்கும் நடிகர் விஷால் நடிப்பில் அடுத்ததாக மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியாக உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தில் எஸ் ஜே சூர்யா, சுனில், செல்வராகவன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகி இருக்கும் இப்படம் வரும் விநாயகர் சதுர்த்திக்கு ரிலீசாக உள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளை நிறைவு செய்திருக்கும் விஷால் தற்போது இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘விஷால் 34’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஸ்டோன்பெஞ்ச் ஃபிலிம்ஸ், ஜீ ஸ்டுடியோஸ் சவுத் மற்றும் இன்வீனியோ ஆரிஜன் இணைந்து தயாரித்து வரும் இப்படத்தில் கதாநாயகியாக நடிகை பிரியா பவானி சங்கர் இணைந்து இருக்கிறார்.

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தொடங்கிய நிலையில் நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘நடந்து முடிந்தவற்றை மறந்துவிடுங்கள். எதிர்காலத்தை நோக்கி பயணியுங்கள்’ என்று மோட்டிவேஷன் செய்து வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கிறார். அது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகி வருகிறது.