Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு.. நன்றி கூறிய விஷால்

Actor Vishal Thanks to CM MK Stalin

தமிழ்த் திரையுலகத்தில் நன்மைக்காக முதல்வர் எம் கே ஸ்டாலின் அவர்கள் சமீபத்தில் வரிவிலக்கு உட்பட சில அறிவிப்புகளை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து முதல்வருக்கு நன்றி தெரிவித்து விஷால் கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, பேரன்பிற்கும், பெரும் மரியாதைக்கும் உரிய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு,வணக்கம், நவீன தமிழகத்தின் சிற்பி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களையும், தமிழ் திரையுலகையும் பிரிக்க முடியாது.

வரிவிலக்கு முதல் பையனூரில் வீடு கட்ட இடம் வரை திரைத்துறையினர் ஒவ்வொருவரின் தேவைகளையும் பூர்த்தி செய்து கொடுத்தார்,தமிழ் திரையுலகை தாய் விடாக நினைத்து வழி நடத்திய கலைஞர் அவர்களின் பெயரால் அவரது பிறந்தநாள் அன்று தமிழ் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையாளருக்கு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெயரால் “கலைஞர் கலைத்துறை வித்தகர் விருதும்”, ரூபாய் பத்து லட்சம் ரொக்கப்பணமும் மற்றும் நினைவுப்பரிசும் தமிழக அரசு சார்பில் இந்த ஆண்டு முதலே வழங்கப்படும் என்று அறிவித்த போதே அக மகிழ்ந்தோம்.

அதற்கு ஒரு குழு அமைத்து அந்த குழுவின் தலைவராக மூத்த இயக்குனர் திரு.எஸ்.பி.முத்துராமன் அவர்களையும், உறுப்பினர்களாக தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் திரு.நாசர் அவர்களையும், மற்றொரு உறுப்பினராக நடிகரும், நெருங்கிய இயக்குனருமான திரு.கரு. பழனியப்பன் அவர்களையும் நியமித்து ஆணை பிறப்பித்து நடிகர் சங்கத்துக்கு பெருமை சேர்த்த மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.

Actor Vishal Thanks to CM MK Stalin
Actor Vishal Thanks to CM MK Stalin
Actor Vishal Thanks to CM MK Stalin
Actor Vishal Thanks to CM MK Stalin
Actor Vishal Thanks to CM MK Stalin
Actor Vishal Thanks to CM MK Stalin