முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்கள் மறைவுக்குப் பிறகு அதிமுக பிளவு பட்ட போது கூவத்தூர் ரிசார்ட் முக்கிய ஒன்றாக இருந்தது. அதிமுக எம்எல்ஏக்கள் கட்சி தாவலை தடுக்க இங்கே தான் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
அப்போது நடிகைக்களை எம்.எல்.ஏக்களுக்கு விருந்தாக்கியதாக அதிமுகவில் இருந்து வெளியேறிய ஒருவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தற்போது நடிகர் விஷாலாம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்னவென்று பார்க்கலாம் வாங்க.
ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த பெருத்த ஒரு முட்டாள் நம் திரையுலகை சேர்ந்த சக கலைஞரை பற்றி மிகவும் கேவலமாக பேசியதாக கேள்விப்பட்டேன்.
அந்த பெரும் முட்டாள் ஒரு விளம்பரத்திற்காக இதைச் செய்து இருக்கிறார் என்பதற்காக நானும் அவருடைய பெயரை குறிப்பிட்டு அவரை விளம்பர படுத்த விரும்பவில்லை, ஏனென்றால் நாங்கள் சக கலைஞர்களை மதிக்கும் நல்ல பண்புள்ளவர்கள்.
மேலும் உங்களின் இதுபோன்ற மனசாட்சியற்று பேசிய சொற்களால் உங்கள் இல்லத்தில் உள்ள பெண்களின் மனநிலையை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். இந்த பூமியில் உங்களை போன்ற மனித தன்மையற்ற நபர்களும் இருக்கிறார்கள் என்பதை எண்ணி வேதனை அடைகிறேன்.
இப்படி கீழ் தனம் உள்ள உங்களால் அரசியலில் மக்கள் பணியில் மக்களுக்காக நல்ல திட்டங்களை எப்படி வகுக்க முடியும் என்பதே கேள்விக்குறிதான். இந்த பதிவு நடிகர் சங்க பொதுச்செயலாளர் என்ற முறையில் இல்லை, சக கலைஞனாகவும், பெண்களை இழிவுபடுத்தி பேசிய உங்களை சக மனிதனாகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.
முன்குறிப்பு :- உங்களின் அறிவற்ற செயலினை புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். உங்களுக்கு ஒரு வேலை புரியவில்லை என்றால் உங்களை விட அதிகமாக படித்த அருகில் உள்ள இரண்டாம் வகுப்பு மாணவ, மாணவியர்களிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள் என தெரிவித்துள்ளார் விஷால்.
