Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

திரைத்துறைக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன் – விஷால்

Actor Vishal wishes DMK leader MK Stalin and Udhayanidhi stalin

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (மே 2) காலை முதலே மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் திமுக தலைமையிலான கூட்டணி சுமார் 150க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் இருக்கிறது. திமுக தலைமையிலான ஆட்சி அமைவது உறுதியாகிவிட்டது.

இதனைத் தொடர்ந்து திமுக தலைவர் ஸ்டாலினுக்குப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் எனப் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

விஷால் தனது சமூக வலைத்தள பக்கத்தில், “இந்த அற்புதமான வெற்றிக்கு திமுகவுக்கு வாழ்த்துகள்.

அன்பு நண்பர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் ஆகியோருக்கு நன்றி. நம் முதல்வர் மு.க.ஸ்டாலினை வருக வருக என வரவேற்கிறேன்.

அடுத்த சில வருடங்களில் நமது தமிழகத்துக்கு நல்ல விஷயங்கள் கிடைத்துச் செழிக்கட்டும். உடைந்து போயிருக்கும் நமது திரைத்துறைக்கும் தேவையான ஆக்சிஜன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன்” என்று பதிவு செய்துள்ளார்.