தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். வெண்ணிலா கபடி குழு மூலம் அனைவருக்கும் பரிச்சயமான இவர் அதனை தொடர்ந்து பல படங்களில் நடித்திருக்கிறார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான கட்ட குஸ்தி திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது.
அதனைத் தொடர்ந்து தற்போது லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவு ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அதில், “ஒரு அழகான சாலை ஒரு அழகான பயணம் மற்றும் இலக்குக்கு வழிவகுக்கிறது. இதை என் வாழ்க்கையின் மறக்க முடியாத பயணமாக மற்றியதற்கு இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்திற்கு நன்றி” என்று தெரிவித்திருக்கிறார்.
A beautiful road
leads to a beautiful journey and a wonderful destination#LalSalaamThankss to my director @ash_rajinikanth for making this as one of my most memorable journeys….
She is in full control 🙂 pic.twitter.com/FEn2UJLPxb
— VISHNU VISHAL (VV) (@TheVishnuVishal) March 27, 2023