கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் யாஷ். இவரது நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் கே ஜி எஃப்.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாவது பாகம் வெளியாகி நான்கு நாளில் 500 கோடி வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. உலகம் முழுவதும் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் படத்தை காட்டிலும் தமிழ் ரசிகர்களை கேஜிஎப் திரைப்படம் அதிக அளவில் கவர்ந்து வருகிறது. இந்த படத்தையும் நடிகர் யாஷ் அவர்களின் நடிப்பை பாராட்டி சிவகார்த்திகேயன் பதிவு செய்திருந்தார்.
இந்த பதிவை பார்த்த யாஷ் அவருக்கு நன்றி கூறியது மட்டுமல்லாமல் உங்களது டாக்டர் படத்தை ரசித்துப் பார்த்தேன் என கூறினார். அதற்கு சிவகார்த்திகேயனின் நன்றி தெரிவித்துள்ளார். இதன் மூலம் யாஷ் அவர்களை கவர்ந்த தமிழ் படம் டாக்டர் என்பது தெரியவந்துள்ளது.