கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் யாஷ். கே ஜி எஃப் என்ற படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான இவர் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகத்திலும் நடித்தார்.
கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் யாஷ். கே ஜி எஃப் என்ற படத்தின் மூலம் உலகம் முழுவதும் பிரபலமான இவர் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகத்திலும் நடித்தார்.
இந்த இரண்டு படங்களும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. யாஷ் நடிப்பில் அடுத்து என்ன படம் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் இருந்து வருகிறது.
இப்படியான நிலையில் யாஷ் அளித்த பேட்டி ஒன்றில் அவரிடம் உங்களுடைய ரோல் மாடல் யார் என கேட்கப்பட்டுள்ளது. அதற்கு யாஷ் ஷங்கர் நாக், அம்பரீஷ், Dr ராஜ்குமார், அமிதாப் பச்சன், கமல்ஹாசன் என பல நட்சத்திரங்கள் இருக்கிறார்கள்.
ஆனாலும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் அதிகம் என்னை influence செய்கிறார் என தெரிவித்துள்ளார். இவருடைய இந்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.