கன்னடத் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் யாஷ். நடிகராக இருந்த இவர் கேஜிஎஃப் படத்தின் மூலம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகமும் மாபெரும் வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் பான்மசாலா நிறுவனம் ஒன்று தங்களது விளம்பர படத்தில் நடிக்க நடிகர் யார் அவர்களை அணுகி உள்ளது. இரட்டை இலக்க கோடிகளை கொட்டிக் கொடுக்க தயாராக இருந்தது. ஆனால் நடிகர் யாஷ் இதுபோன்ற விளம்பர படங்களில் நடிக்க மாட்டேன் என தெரிவித்துள்ளார்.
பான் இந்தியா படத்தின் மூலம் தனக்கு கிடைத்த பெயரில் நல்ல வழியில் பயன்படுத்தி ரசிகர்களுக்கு நல்ல விஷயங்களை எடுத்துக் கூறுவேன் என நடிகர் யாஷ் கூறிவிட்டதாக அவரது விளம்பரப் பட ஒப்பந்தங்களை கவனிக்கும் தனியார் ஏஜென்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தகவல் வைரலாக பலரும் நடிகர் யாஷ் அவர்களை பாராட்டி வருகின்றனர்.