Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

KGF படத்திற்கு யாஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்

Actor Yash Salary for KGF Movie

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் யஷ். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் கே ஜி எஃப். பிரசாந்த் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றதை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.

பிரமாண்ட பட்ஜெட்டில் வெளியான இந்த படத்திற்காக நடிகர் யஷ் வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது பற்றி தெரிய வந்துள்ளது. முதலில் அவர் சம்பளம் பற்றி பேசியபோது படம் வெளியாகும் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என கூறியுள்ளார். அப்படியே இருந்தாலும் அவருக்கு அதிகபட்சமாக 15 கோடி ரூபாய்தான் சம்பளம் கொடுத்து இருப்பார்கள் என திரைப்பட வினியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பிரம்மாண்டம் என்றால் நடிகர்களின் சம்பளத்தை விட மேக்கிங்கிற்கு தான் அதிக அளவில் செலவிட வேண்டும். அதுதான் உண்மையான பிரமாண்டம். ஆனால் தமிழ் சினிமாவில் 100 கோடி பட்ஜெட் என்றால் அதில் 80 கோடி நடிகரின் சம்பளமாக தான் செல்கிறது. மீதியிருக்கும் 20 கோடியில் எப்படி பிரம்மாண்டத்தை கொண்டு வர முடியும் என அவர் கூறியுள்ளார்.

நெல்சன் இயக்கத்தில் வெளியான டஸ்ட் படத்தில் நடிப்பதற்காக தளபதி விஜய் 100 கோடி சம்பளம் வாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைச் சுட்டிக் காட்டித்தான் திருப்பூர் சுப்பிரமணியன் அவர்கள் இவ்வாறு பேசியுள்ளார்.

Actor Yash Salary for KGF Movie
Actor Yash Salary for KGF Movie