தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் இருப்பவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் தற்போது கோட் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
வெங்கட் பிரபுவுடன் முதல் முறையாக கூட்டணி பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் யுவன் சங்கர் ராஜாவின் இசை என பல எதிர்பாராத சர்ப்ரைஸ்களுடன் இந்தத் திரைப்படம் உருவாகி வருகிறது.
இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இணைந்துள்ளார் யோகி பாபு. இதுவரை விஜயுடன் இணைந்து மெர்சல், பிகில், சர்க்கார் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள யோகி பாபு தற்போது கோட் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.