தென் இந்திய சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. யோகி என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான இவர் காக்கா முட்டை படத்தில் எனக்கே விபூதி அடிக்க பார்த்தல்ல என்று டயலாக் பேசி பட்டி தொட்டி எங்கும் எங்கும் பிரபலமானார்.
இதனைத் தொடர்ந்து அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அண்ணே அனைத்து நடிகர்களுடனும் இணைந்து நடித்து வருகிறார். அது மட்டுமல்லாமல் ஹீரோவாக தர்ம பிரபு, மண்டேலா பொம்மை நாயகி போன்ற படங்களில் எதார்த்தமான நடிப்பை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றார்.
தற்போது யோகி பாபு இல்லாத படமே இல்லை என சொல்லும் அளவிற்கு அனைத்து படங்களிலும் நடித்து வரும் இவர் ஒரு படத்திற்கு கிட்டத்தட்ட மூன்று கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார்.
மேலும் இவரது மொத்த சொத்து மதிப்பு எப்படியும் 40 கோடி ரூபாய் இருக்கும் என தகவல்கள் வெளியாகி வைரல் ஆகி வருகின்றன.