Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கோலாகலமாக நடந்த கேக் மிக்சிங் விழா.. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஜெய்

கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான ஆயத்தப் பணிகள் தற்போதே தொடங்கிவிட்டன. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக கேக் தயாரிப்பது ஒரு விழாவாகவே கொண்டாடப்படுகிறது. பல வகை கேக்குகள் கடைகளில் கிடைத்தாலும், ஓட்டல்களில் தயாரிக்கப்படும் பாரம்பரியம் மிக்க ‘ரிச் பிளம் கேக்’ உலகளவில் பிரபலமானது.

சென்னை பார்க் எலன்சா ஹோட்டலில் 5-ஆம் வருட கேக் மிக்ஸிங் விழா நடைபெற்றது. இதில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெய் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் நடிகர்கள் சுப்பு பஞ்சு, பிரித்வி பாண்டியராஜன், நடிகை ஷாலு சம்மு, இயக்குனர் சசி, தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

Actors join cake mixing ceremony
Actors join cake mixing ceremony