தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகையாக வலம் வந்தவர் லட்சுமி. பல நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ள இவரின் மகள் தான் ஐஸ்வர்யா. நாயகியாக திரையுலகில் அறிமுகமாகி அதன் பின்னர் காமெடி பில்லி குணச்சித்திர வேடம் என அனைத்து விதமான கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார். எஜமான் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ரஜினியோடு இணைந்து நடித்திருந்தார்.
பிறகு சின்னத்திரையிலும் சில சீரியல்களில் நடித்து வந்த நிலையில் தற்போது எந்தவித வாய்ப்பும் இல்லாமல் இருந்து வரும் இவர் சோப்பு வாழ்க்கை நடத்தி வருவதாக தெரிவித்துள்ளார். தெருத்தெருவாக சோப்பு விற்கிறேன். டயட் என்பதால் ஒருவேளை தான் சாப்பிடுவேன். என் வீட்டில் பர்னிச்சர் கிடையாது, டிவி கிடையாது.
அதற்கெல்லாம் நான் கவலைப்பட்டதும் கிடையாது. சோப்பு விற்கும் வேலையைக் கூட மகிழ்ச்சியாகத்தான் செய்கிறேன். எந்த வேலையாக இருந்தாலும் மகிழ்ச்சியாக செய்வேன். எனக்கு கடன் கிடையாது அதனால் எந்த பிரச்சனையும் இல்லை என தெரிவித்துள்ளார். ஏதாவது சீரியலில் வாய்ப்பு கிடைத்தால் தான் என்னுடைய வாழ்க்கை இன்னும் கொஞ்சம் நல்லபடியாக போகும் என உருக்கமாக பேசியுள்ளார்.