தமிழ் சினிமாவின் நாயகி, வில்லி என பன்முக வேடங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஐஸ்வர்யா. வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரைகளிலும் இவர் நடித்துள்ளார்.
தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாத காரணத்தினால் சோப்பு விற்று வருவதாக கூட சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார் ஐஸ்வர்யா.
இந்த நிலையில் தற்போது சென்னை தி நகரில் உஸ்மான் ரோட்டில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார். ஆஃபரில் கொட்டி கிடக்கும் ஆடைகள் கலெக்ஷன், ஆபரணங்கள் என அனைத்தின் விலையையும் கேட்டு ஆச்சரியப்பட்டு ஷாப்பிங் செய்துள்ளார்.
எல்லாமே இருக்கு விலை ரொம்ப கம்மியாவும் இருக்கு என தன்னுடைய ஷாப்பிங் குறித்து பேசியுள்ளார். இவருடைய ஷாப்பிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.