Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாளையத்தம்மன் படத்தில் நடித்த குழந்தையா இது? வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோ

தமிழ் சினிமாவில் பக்தி படங்களுக்கென எப்போதும் தனி வரவேற்பு உண்டு. அந்த வகையில் பல வருடங்களுக்கு முன்னர் வெளியாகவே மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் பாளையத்தம்மன்.

குழந்தை கைத்தவரை உண்டியலில் விழுந்து விட அந்த குழந்தை அம்பாளுக்கு தான் சொந்தம் என கோவில் நிர்வாகம் சொன்ன பெற்ற தாய் மகளை விட்டுக் கொடுக்க மாட்டேன் என அடம் பிடிக்கிறார். அடுத்து நடந்தது என்ன என்பதுதான் இந்த படத்தின் கதைக்களமாக இருந்தது.

இந்த படத்தில் சிறுவயது பெண்ணாக நடித்திருந்தார் அட்சயா ஜெயராமன். இந்த படத்தை தொடர்ந்து மேலும் சில படங்களில் நடித்திருந்த இவர் அதன் பிறகு மொத்தமாக காணாமல் போனார்.

படிப்பில் கவனம் செலுத்த இவர் சினிமாவை விட்டு விலகிய நிலையில் தற்போது மார்க்கெட்டிங் துறையில் பணியாற்றி வருகிறார். இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

Actress Akshaya jayaraman latest photos
Actress Akshaya jayaraman latest photos