Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மலையாள நடிகைக்கு பாலியல் தொல்லை..போலீசில் புகார்

actress-alleges-harassment-on-flight

பிரபல மலையாள நடிகை திவ்ய பிரபா. இவர் தமிழில் ‘கயல்’, ‘கோடியில் ஒருவன்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார்.இந்நிலையில், நடிகை திவ்ய பிரபா விமானத்தில் தனக்கு பாலியல் அச்சுறுத்தல் நடைபெற்றதாக கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில், \”மும்பையிலிருந்து ஏர் இந்தியா விமானத்தில் கொச்சிக்குத் திரும்பிய போது 12 சி இருக்கையில் மதுபோதையில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் 12 பி இருக்கையில் தனது அருகில் அமர்ந்துகொண்டு காரணமே இல்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தவறாக நடந்து கொண்டார்.

இதுபற்றி விமானப் பணிப்பெண்ணிடம் தெரிவித்தபோது, அவர் எனது இடத்தை மட்டுமே மாற்றி கொடுத்தாரே தவிர எனக்கு தொல்லை கொடுத்தவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கொச்சி வந்ததும் விமான நிலைய அதிகாரிகளிடம் இது தொடர்பாக புகார் அளித்தேன். கேரள போலீசாருக்கும் ஆன்லைன் மூலமாக புகார் அளித்துள்ளேன். இந்த விஷயத்தில் பயணிகளின் பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க வேண்டும். உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்\” என்று பதிவிட்டுள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Divyaprabha (@divya_prabha__)