தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை ஐந்து சீசன்கள் ஒளிபரப்பாகி உள்ள நிலையில் ஆறாவது சீசன் விரைவில் தொடங்கப்பட உள்ளது.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி கன்னடம் என பல்வேறு மொழிகளில் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி பல சீசன்களை கடந்து ஒளிபரப்பாகி வருகிறது. தமிழில் தொடங்க உள்ள இந்த நிகழ்ச்சி யாரெல்லாம் பங்கேற்பார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் நடிகை அமலா பால் அளித்த பேட்டி ஒன்றில் பிக் பாஸ் வெற்றி குறித்து கேட்க அவர் அதிரடி பதிலை அளித்துள்ளார். அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சி போட்டியாளராக பங்கேற்பீங்களா என கேட்க நான் இந்த நிகழ்ச்சிக்கு போக மாட்டேன் ஒரு வேலை இமயமலை அல்லது காட்டில் நடத்தினால் கட்டாயம் கலந்து கொள்வேன் என தெரிவித்துள்ளார்.
அமலாபாலின் பதிலை கேட்ட ரசிகர்கள் இதெல்லாம் நடக்கிற விஷயமா? அப்படின்னா நீங்க சர்வைவர் நிகழ்ச்சியில் தான் கலந்து கொள்ள வேண்டும் என கூறி வருகின்றனர்.
