இயக்குனர் அட்லி இயக்கத்தில் விஜய் மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான பிகில் படத்தில்கேப்டன் தென்றல் என்னும் கதாபாத்திரத்தில் விஜய்க்கு நிகராக நடித்து பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் தான் அமிர்தா ஐயர். இதனைத் தொடர்ந்து இவரின் நடிப்பில் வெளியான வணக்கம் டா மாப்பிள, லிஃப்ட் போன்ற திரைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ள நிலையில் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு கொண்டிருக்கும் அமிர்தா ஐயர். தற்போது காபியில் குளிப்பது போல் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதன் கீழ் இந்த புகைப்படங்கள் ஒரு விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டது என்றும் கஃபைன் மற்றும் விட்டமின் இ-ன் கலவையுடன் இருக்கும் காபியில் குளித்துவந்தால் உடலுக்கு நன்மை தரும் என்று கேப்ஷன் போட்டிருக்கிறார்.
மேலும் இது ஒரு பெயிடு விளம்பரம் என்பதால் அனைவரும் இதனை யோசிக்காமல் உபயோகிக்காதீர்கள் உங்களின் சர்மத்திற்கு இது செட்டாகுமா என்று மருத்துவரிடம் ஆலோசனை செய்து விட்டு பின்னர் உபயோகியுங்கள் என்றும் கூறியிருக்கிறார். இதனைக் குறித்து அமிர்தா ஐயர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள் இதனை ட்ரெண்டிங் ஆகி வருகின்றனர்.
View this post on Instagram