தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும் இடையே காதல் இருப்பதாகவும் இருவருக்கும் விரைவில் திருமணம் நிலவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில் அது வதந்தி என விஜய்தேவரகொண்டா விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா உடன் ஒரு படத்தில் இணைந்து நடித்து வரும் அனன்யா பாண்டி அவர்கள் ஒரு பேட்டி ஒன்றில் விஜய் குறித்து பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. விஜய் தேவரகொண்டா படத்தில்தான் தைரியசாலியாகவும் முரடனாகவும் நடிப்பார். நிஜ வாழ்க்கையில் அவர் ஒரு பயந்தாங்கோலி யாரிடமும் அவ்வளவாக பேச மாட்டார். தானுண்டு தன் வேலையுண்டு என இருந்து விடுவார்.
நடிப்பில் முழு அளவில் ஒத்துழைப்பு கொடுத்தார். படத்தில் இருக்கும் தைரியம் அவருக்கு நிஜ வாழ்க்கையில் கிடையாது என கூறியுள்ளார். இதனால் விஜய்தேவரகொண்டா ரசிகர்கள் இந்த நடிகையை திட்டி தீர்த்து வருகின்றனர்.