இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ‘மாஸ்டர்’. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சஞ்சீவ், சாந்தனு போன்ற பலர் நடித்திருந்தனர்.
ரசிகர்களிடையே மாபெரும் வெற்றி அடைந்த இப்படத்தை பற்றி நடிகை ஆண்ட்ரியாவிடம் சமீபத்தில் எடுக்கப்பட்ட பேட்டியில் கேட்ட பொழுது அவர் தளபதி விஜய் குறித்து சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்திருக்கிறார்.
அதாவது நடிகை ஆண்ட்ரியா நான் அந்த படம் பண்றதுக்கு முன்னாடி விஜய்யோட எந்த படங்களையும் அவ்வளவாக பார்த்ததில்லை அதனால் எனக்கு அவ்வளவாக எதுவும் தெரியாது. ஆனால் இந்த படத்தில் அவருடன் இணைந்து நடித்த பிறகு நானே விஜய் பேன் ஆகிட்டேன்!, ஏன்னா அவருடன் இணைந்து பணியாற்றியது ரொம்ப எளிமையாக இருந்தது.
ஏனென்றால் அவர் செட்டில் இருக்கும் பொழுது ஒரு ஸ்டார் மாதிரி நடந்து கொள்ள மாட்டாரு எப்பவும் ரொம்ப நார்மலா இருப்பாரு. எல்லாரிடமும் அன்பாகவும், நிதானமாகவும் நடந்து பாரு மொத்தத்துல அவரு ஒரு நல்ல மனுஷன்னு சொல்லலாம். என்று விஜய் குறித்து மனம் திறந்து பகிர்ந்துள்ளார். இந்த தகவல் ரசிகர்களிடையே தற்போது வைரலாகி வருகிறது.