Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இணையத்தை கலக்கும் அணிகா சுரேந்தரின் லேட்டஸ்ட் புகைப்படம்

actress anika surendran latest photos diwali vibes

மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடிக்க தொடங்கிய அனிகா சுரேந்திரன் தமிழில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான அஜித்தின் “என்னை அறிந்தால்” என்ற படத்தில் திரிஷா-அஜித் அவர்களின் மகளாக நடித்து அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஜெயம் ரவியின் தங்கையாக “மிருதன்” திரைப்படத்தில் நடித்து அசத்தியிருந்தார். அதன் பின்னர் விசுவாசம் படத்தில் மீண்டும் அஜித் மற்றும் நயன்தாரா அவர்களின் மகளாக நடித்திருந்தார்.

ஆனால் தற்போது கதாநாயகியாக நடிக்க ஆர்வம் காட்டி வரும் அனிகா சுரேந்திரன் சில ஷார்ட் பிலிம் இல் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆகையால் வெள்ளி திரையிலும் கதாநாயகியாக நடிக்க வேண்டும் என்ற ஆசையால் அவ்வப்போது வித்தியாசமான உடைகளில் போட்டோ ஷூட் செய்து புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வருவார். அதேபோல் தற்போது சுடிதார் உடையில் கியூட்டாக போட்டோ ஷூட் செய்து தீபாவளி வைப்ஸ் என்ற தலைப்புடன் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.