கற்றது தமிழ் படத்தின் மூலம் ராம் இயக்கத்தில் கதாநாயகியாக தமிழில் அறிமுகமானவர் நடிகை அஞ்சலி.
இதன்பின் வெங்கெடேஷ் இயக்கத்தில் வெளிவந்த அங்காடி தெரு படம் தான் இவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக திரையுலகில் அமைந்தது.
இதனை தொடர்ந்து தூங்க நகரம், மங்காத்தா, எங்கேயும் எப்போதும், கலகலப்பு என வரிசையாக பல படங்களில் நடித்து வந்தார்.
மேலும் சமீபத்தில் ராம் இயக்கத்தில் மம்மூட்டி நடித்து வெளியான பேரன்பு படத்தில் சில காட்சிகள் நடித்திருந்தார்.
மேலும் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நடித்து தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார்.
சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களை அவ்வபோது பதிவிட்டு வந்த நடிகை அஞ்சலி தற்போது துளி கூட மேக்கப் போடாமல் தனது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆகி வருகின்றன.
And wen all the glitter fades there’ll still be stardust in her veins.. #happy #weekend #saturday pic.twitter.com/GJo5pGPDWW
— Anjali (@yoursanjali) August 1, 2020