Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

திருமணம் குறித்து பரவும் வதந்தி .முற்றுப்புள்ளி வைத்த நடிகை அஞ்சலி.

actress-anjali latest speech-goes-viral

தமிழில் 2007-ல் வெளியான கற்றது தமிழ் படத்தில் அறிமுகமான அஞ்சலி, தொடர்ந்து பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் அதிக படங்களில் நடித்திருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு இவரின் உடல் எடை அதிகமானதால் படங்கள் குறைந்தன. இதையடுத்து சினிமாவை விட்டு விலகிய அஞ்சலி உடல் எடையை குறைத்து மீண்டும் சினிமாவில் நுழைந்தார். நடிகை அஞ்சலியும் ஜெய்யும் காதலித்து வந்ததாகவும் இருவரும் திருமணம் செய்து கொள்ளவுள்ளதாகவும் தகவல் உலா வந்து கொண்டிருந்த நிலையில் திடீரென இருவரும் பிரேக் அப் செய்ததாக செய்திகள் வெளியானது. தற்போது சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வரும் அஞ்சலி, ‘கேம் சேஞ்சர்’, ‘ஏழு கடல் ஏழு மலை’ போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை அஞ்சலி தன்னை பற்றி பரவி வரும் திருமண வதந்திகள் குறித்து நேர்காணல் ஒன்றில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், \”சினிமாவில் எனக்கு நிறைய நண்பர்கள் இருக்கிறார்கள். என்னைப்பற்றி என்ன எழுத வேண்டும், யாருடன் இணைத்து எழுத வேண்டும் என்று அவர்களே முடிவு செய்து எழுதுகிறார்கள். முதலில் நடிகர் ஜெய்யை காதலித்ததாக செய்தி வந்தது. பின்னர் தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனதாக சொல்லப்பட்டது. எனக்கே தெரியாமல் எனக்கு திருமணம் ஆனதை நினைத்து நான் சிரித்தேன்\” என்று கூறியுள்ளார்.”,

actress-anjali latest speech-goes-viral
actress-anjali latest speech-goes-viral