Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தலைகீழாக தொங்கிய நடிகை…. வைரலாகும் புகைப்படங்கள்

Actress hanging upside down

‘கற்றது தமிழ்’ படம் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் அஞ்சலி. பின்னர் ‘அங்காடித் தெரு’ படம் அவரை தமிழ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெறச் செய்தது. எங்கேயும் எப்போதும், இறைவி உள்ளிட்ட படங்களில் அவர் நடிப்புக்கு பெயர் கிடைத்தது. நடிகை அஞ்சலி கடைசியாக தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான ‘வக்கீல் சாப்’ படத்தில் நடித்திருந்தார்.

தற்போது சில தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அஞ்சலி துணியில் தலைகீழாக தொங்கியபடி யோகா செய்யும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.