தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக திகழ் பவர் தான் அஞ்சலி. இவர் தமிழில் அங்காடி தெரு என்ற படத்தின் மூலம் அனைவருக்கும் பரிச்சயமானார். அதனைத் தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த இவர் தற்பொழுது உடல் எடை குறைத்த பின் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகளின் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் ஃபால் என்னும் வெப் தொடரில் நடித்திருக்கிறார்.
இந்தத் தொடர் ஒரு இளம் பெண் தான் மறந்து போன சம்பவங்களை மீண்டும் ஞாபகப்படுத்துவதை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை அஞ்சலியுடன் இணைந்து பூர்ணிமா பாக்யராஜ், தலைவாசல் விஜய், நமிதா கிருஷ்ணமூர்த்தி, சந்தோஷ் பிரதாப் மற்றும் சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். விரைவில் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாக இருக்கும் இந்த தொடரின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்பொழுது வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.