Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

உடல் எடை கூடியதால் பட வாய்ப்பு கிடைக்காத நடிகை.. வாய்ப்பு கொடுத்த விஜய்.. வைரலாகும் தகவல்

Actress Anushka in AL Vijay Direction

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக பிரம்மாண்ட நாயகியாக வலம் வருபவர் அனுஷ்கா ஷெட்டி. தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் அதிகமான அளவில் படங்களில் நடித்துள்ளார்.

ஆர்யாவுடன் இணைந்து நடித்த ஒரு படத்திற்காக அனுஷ்கா செட்டி உடல் எடையை கூட்ட அது அப்படியே மடமடவென கூடிவிட்டது. இதனால் காலப்போக்கில் வாய்ப்பில்லாமல் ஓரங்கட்டப்பட்ட அனுஷ்கா. அதன்பிறகு சைலன்ஸ் என்ற படத்தில் நடித்தார்.

இந்த நிலையில் தற்போது இவரை வைத்து ஒரு படத்தை இயக்க தயாராகி வருகிறாராம் இயக்குனர் விஜய். ஏற்கனவே அனுஷ்கா விஜய் இயக்கத்தில் வெளியான தெய்வத்திருமகன் என்ற படத்தில் நடித்துள்ளார். ‌ ‌

இந்த நிலையில் தற்போது புதிய படத்தில் அனுஷ்கா நடிக்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் இதுபற்றி இன்னும் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

Actress Anushka in AL Vijay Direction
Actress Anushka in AL Vijay Direction