தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் கயல். டிஆர்பி-யில் மாஸ் காட்டிய அனைத்து தொலைக்காட்சி சீரியல்களில் பின்னுக்கு தள்ளி முதலிடத்தில் இருந்து வருகிறது.
ஒவ்வொரு நாளும் இந்த சீரியல் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் நாயகியாக சைத்ரா ரெட்டி நடித்து வருகிறார். ஏற்கனவே இவர் பல சீரியல்களில் நடித்து இருந்தாலும் யாரடி நீ மோகினி சீரியல் தான் இவருக்கு பெரிய இடத்தை பெற்றுக் கொடுத்தது. இதனைத் தொடர்ந்து கயல் என்ற சீரியலில் நாயகியாக நடித்து வரும் இவர் வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்து மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு தம்பியாக நடித்து வரும் நடிகருடன் ஒரு செல்ஃபி வீடியோவை எடுக்க முயற்சி செய்த போது பலத்த அடி வாங்கி உள்ளார். இந்த வீடியோவை அவரே வெளியிட்டுள்ளார்.
View this post on Instagram