கன்னடம்,இந்தி திரைப்படங்களில் அதிகம் நடித்தவர் தீபிகா படுகோனே. இவர் தமிழில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான கோச்சடையான் படத்தில் நடித்திருந்தார்.
இவர் பாலிவுட் நடிகரான ரன்வீர் சிங் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்த தீபிகா படுகோனே சமீபத்தில் கர்ப்பமாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருந்தார்.
அந்த வகையில் தற்போது அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனால் குடும்பத்தினர் அனைவரும் மிகுந்த உற்சாகத்தில் இருக்கின்றனர். இந்த தகவலால் ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.