பாலிவுடில் பிரபல காதல் தம்பதியாக வலம் வருபவர்களுள் ஒருவர்தான் ரன்வீர் சிங் மற்றும் தீபிகா படுகோனே. இதில் தீபிகா படுகோனேவின் கணவனான ரன்வீர் சிங் தன் நடிப்பு தாண்டி, ஆஃப் ஸ்க்ரீனிலும் பயங்கர எனர்ஜியாக இருக்க கூடியவர். அந்த எனர்ஜிக்காவே அவருக்கு எக்கச்சக்க ரசிகர்கள் உலகம் முழுவதிலும் இருக்கிறார்கள்.
இவர் எப்போதும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். அதில் விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை உற்சாகப்படுத்துவார். அதேபோல் தற்போது வித்தியாசமான முறையில் நிர்வாணமாக அமர்ந்திருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.
தற்போது இவரது இந்த புகைப்படம் இணையத்தில் பயங்கரமாக வைரலாகி வருவது மட்டுமின்றி இதனை கோலிவுட் திரை வட்டாரத்திலும் விஷ்ணு விஷால் உள்ளிட்ட பலர் இதேபோல் புகைப்படத்தை பதிவிட்டு வருகின்றனர். இது குறித்து அண்மையில் எடுக்கப்பட்ட பேட்டியில் நடிகை தீபிகா படுகோனே தனது கணவரின் இந்த நிர்வாண புகைப்படத்தை குறித்து பகிர்ந்து இருக்கிறார்.
அதில் அவர் உண்மையில் ரன்வீர் சிங் ஈடுபட்ட இந்த போட்டோஷுட் புகைப்படம் தீபிகாவிற்கு மிகவும் பிடித்திருந்ததாம். மேலும் அந்தப் புகைப்படங்களை அவர் இணையத்தில் வெளியிடுவதற்கு முன்பே பார்த்து உள்ளாராம். மேலும் இப்ப புகைப்படத்தால் தனக்கு எந்த தயக்கமும் இல்லை என்றும் கூறியுள்ளார். இப்படி தீபிகா படுகோனே தனது கணவரை தொடர்ந்து ஆதரித்து வருவதால் தான் அவர் மிகப்பெரிய சாம்பியனாக வலம் வருகிறார் என்று பாலிவுட் வட்டாரத்தில் தெரிவித்து வருகின்றனர். மேலும் இவரது இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram