Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தத்துவத்துடன் புகைப்படம் வெளியிட்டு ரசிகர்களை குஷி படுத்திய தர்ஷா குப்தா

actress dharsha gupta latest insta post viral

சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே சீரியலில் வில்லியாக நடித்து பிரபலமானவர் தர்ஷா குப்தா‌. இந்த சீரியலில் இருந்து பாதியில் விலகிய இவர் அதன் பின்னர் படங்களில் நாயகியாக நடிக்க தொடங்கியது மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் பிரபலமானார்.

தற்போது ‘ஓ மை கோஸ்ட்’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காககாத்துக் கொண்டிருக்கும் தர்ஷா குப்தா அடுத்தடுத்த பட வாய்ப்புகளுக்காக தனது சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகான ஆடையில் லேட்டஸ்ட்டாக எடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டு “பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும் தரையில் இருக்க கற்றுக் கொள். சிறகுகளை இழந்தாலும் வருந்த மாட்டாய்” என்று புதிய தத்துவத்துடன் பதிவிட்டுள்ளார். அது தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Dharsha Gupta (@dharshagupta)