கடந்த ஆண்டு வெளியான ஜி.வி.பிரகாஷின் “பேச்சுலர்” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் திவ்யபாரதி. சதீஷ்குமாரின் இயக்கத்தில் உருவான இந்த படம் ரசிகர்களின் இடையே கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. ஆனால் இந்தப் படத்தின் மூலம் திவ்யா பாரதி அனைத்து ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தது மட்டுமின்றி ஒரே படத்தில் அனைவருக்கும் பரிச்சயமானவராக மாறிவிட்டார்.
இதைத்தொடர்ந்து ஒரு சில படங்களில் கமிட்டாகி நடித்துக் கொண்டிருக்கும் திவ்யபாரதி அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இளைஞர்களை சூடேற்றும் விதமாக தனது ஹாட் புகைப்படங்களை ஷேர் செய்து கொண்டிருப்பார். அண்மையில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் எடுக்கப்பட்ட பேட்டியில் கலந்து கொண்ட இவர் தன் வாழ்க்கையை குறித்த பல விஷயங்களை மனம் விட்டு பேசியுள்ளார்.
திவ்யபாரதி எப்படிப்பட்ட காதலி? என்ற கேள்விக்கு தான் இதுவரை காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்ததில்லை குடும்பம், கேரியர் என்று சென்று கொண்டிருக்கிறேன். எனது கேரியர் தான் முதல் காதல் என்று பதிலளித்துள்ளார். உங்களின் அழகின் ரகசியம் எது? என்ற கேள்விக்கு அழகு பார்க்குறவங்க கண்களில் தான் இருக்கு. ஆழ்மன அமைதி இருந்தாலே அழகாகத் தெரிவோம் அது தான் ரகசியம் என்று கூறியுள்ளார்.
உங்களின் நீண்ட நாள் கனவு எது? என்ற கேள்விக்கு எனது கனவு நீண்ட ஆசை எல்லாமே எனது அம்மாவிற்கு சொந்த வீடு வாங்கி கொடுக்கணும் என்பதுதான் என்று கூறியுள்ளார். யாரிடமும் சொல்லாத ஒன்றை பகிர்ந்து கொள்ளுங்கள் என்ற போது திவ்ய பாரதி கண்ணீர் மல்க தனது அப்பாவிற்கு ஒரு கோரிக்கை வைத்துள்ளார்.
சமீபத்தில் கால் செய்த போது என் பெயர் என்ன? என்று கேட்டீர்கள் அதை நினைத்து உங்களிடம் கோபப்படுவதா இல்லை உங்களது சூழ்நிலை காரணமா என்று கேட்கத் தோன்றியது ஆனால் அம்மா ஒற்றை ஆளாக என்னையும் தம்பியையும் இந்த அளவுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். அதற்காக நீங்கள் அவரை நேரில் சென்று பார்த்து பாராட்ட வேண்டும் அதுதான் எனது கோரிக்கை என்று கண்ணீர் மல்க பேசியுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
