Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிகில் பட நடிகை காயத்ரி ரெட்டி நிச்சயதார்த்தம்… வைரலாகும் புகைப்படம் .!

Actress Gayathri Reddy in Engagement Photos

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் அட்லி இயக்கத்தில் வெளியான திரைப்படம் பிகில். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இந்துஜா உட்பட பல்வேறு நடிகைகள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

இந்த நடிகைகளில் ஒருவர்தான் காயத்ரி ரெட்டி. பிகில் படத்திற்கு பிறகு இவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.

இதனைத் தொடர்ந்து சில படங்களில் நடித்து வரும் இவருக்கு கடந்த ஏப்ரல் 29ஆம் தேதி இவருக்கு நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. நிச்சயதார்த்த புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட அவை சமூக வலைதளங்களில் வைரல் ஆகி உள்ளன.