கடந்த ஜூன் 3ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி மாபெரும் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்து வசூலை வாரி குவித்த திரைப்படம் தான் விக்ரம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இப்படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில்,சூர்யா, காயத்ரி, நந்தினி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தனர். தமிழில் மாபெரும் வெற்றியை கண்ட இப்படம் திரையரங்கில் 100 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடி சாதனை படைத்துள்ள.
இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பின் பொழுது தனக்கான காட்சியில் மறந்த விஷயத்தை பற்றி நடிகை காயத்ரி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர், ஒரு படத்தில் ஒரு நடிகர் இறந்து போவது போல நடித்தால் அவர் கண் விழித்து எழுந்து சிரிப்பது போல ஒரு காட்சியையும் கூடுதலாக எடுப்பது வழக்கம். அந்த நடிகர் உயிருடன் உள்ளார், அவர் செய்தது நடிப்பு தான் என்று உலகத்துக்குச் சொல்வதற்காக இப்படிச் செய்யப்படும்.
விக்ரம் படத்தில் நான் இறந்த காட்சியைப் படமாக்கியபோது அப்படியொரு கூடுதல் காட்சியை எடுக்க மறந்து விட்டோம். நேரமின்மை காரணமாக லைட்டிங் ஏற்பாடுகளையும் மாற்ற முடியவில்லை. எனவே புதுமையாகச் செய்வதற்காக இதுபோல எடுத்தோம் என இயக்குநர், ஒளிப்பதிவாளருடன் சிரித்தபடி போஸ் கொடுத்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு இதனை பகிர்ந்து இருக்கிறார். இதனைப் பார்த்த ரசிகர்கள் இப்பதிவிற்கு கமெண்ட் செய்து வைரலாக்கி வருகின்றனர்.
View this post on Instagram