தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக இருக்கும் காயத்ரி ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்னும் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானார். இப்படத்தில் கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து ரம்மி, சூப்பர் டீலக்ஸ், புரியாத புதிர், ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், பொன்மாலை பொழுது உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
ஆனாலும் இவரால் முன்னணி நடிகையாக மாற முடியவில்லை. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தில் பஹத்பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். குறைந்த பட வாய்ப்புகளை வைத்து நடித்துக் கொண்டிருந்த காயத்ரி தற்போது அதிக பட வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்ற காரணத்தால் கவர்ச்சி காட்ட மாட்டேன் என்ற கொள்கையில் இருந்து மனம் மாறி தற்போது தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் ஒரு விழாவில் கலந்து கொண்ட காயத்ரி சேரியில் அம்சமாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
