நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் காயத்ரி. இவர் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்திருப்பார். இப்படத்தில் விஜய் சேதுபதி அவரை “ப்பா யார்ரா இது பேய் மாதிரி மேக்கப் போட்டு இருக்கிறது” என்கின்ற வசனத்தை வைத்து கிண்டல் அடித்திருப்பார். இந்த ஒரு வசனத்தாலே காயத்ரி ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவராக மாறிவிட்டார்.
இதனை தொடர்ந்து ரம்மி, சூப்பர் டீலக்ஸ், ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன், பொன்மாலைப்பொழுது போன்று பல படங்களில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படத்தில் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் தற்போது வெளியான “மாமனிதன்” திரைப்படத்திலும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்து நல்ல வரவேற்பினை பெற்று வருகிறார்.
குடும்ப பாங்கான கதைகளாகவே நடித்து வந்துள்ள காயத்ரி தற்போது தன்னை மாற்றி கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அதாவது மற்ற நடிகைகளைப் போல் கவர்ச்சி உடைகளை அணிந்து கொண்டு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்களுமா?.. என்று அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
View this post on Instagram