தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. குட்டி குஷ்பு என ரசிகர்களால் கொண்டாடப்பட்ட இவர் ஒரு கட்டத்தில் வாய்ப்பு இல்லாமல் போன நிலையில் தன்னுடைய உடல் எடையை மொத்தமாக குறைத்து மீண்டும் ரீ எண்ட்ரி கொடுத்து படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது தமிழில் நான்கு படங்களிலும் தெலுங்கில் இரண்டு படங்களிலும் ஒப்பந்தம் ஆகி உள்ளார். இப்படியான நிலையில் நடிகை ஹன்சிகாவுக்கு தொழிலதிபர் ஒருவருடன் டிசம்பர் மாதத்தில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜெய்ப்பூரில் உள்ள 450 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரண்மனையில் தான் இவர்களின் திருமணம் நடைபெற உள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகள் கோலாகலமாக நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. விரைவில் நடிகை ஹன்சிகாவின் திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.